நான் வாசித்த மூன்று கம்யூனிச நூல்களை பார்ப்பதற்கு முன்பு கம்யூனிசத்தைப் பற்றி எனது கருத்தை தெளிவாகத் தெரிவித்துவிடுகிறேன்.
கம்யூனிசம் – நல்ல சித்தாந்தம். ஆனால், காலத்துக்கு காலம், இடத்துக்கு இடம், மக்கள் மனநிலைக்கு மனநிலை மாறுபட வேண்டும். கருத்துக்களும், சிந்தாந்தங்களும் புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். நூற்றி ஐம்பது வருடங்களாக ஒரே விஷயத்தை பின்பற்றினால், பேசினால் அது பழமைவாதமாக மாறிவிடும். எக்ஸ்பையரி டேட் ஓட்டி தூக்கி எறிந்திவிடுவார்கள்.
இன்று, கம்யூனிசம் தவறான புரிதலுக்கு காரணமே காலத்திற்கு தகுந்தாற் போல் மாற்றிக் கொள்ளாமல் கண்முடித்தனமாக பின்ப்பற்றுவதும், பேசுவதும் தான். ‘கம்போடியா இனப்படுகொலை’ காரணமே கம்யூனிசத்தின் தவறான புரிதல் என்று சொல்லலாம். சில சமயம் எனக்கே என் புரிதல் மீது இந்த சந்தேகம் உண்டு. ‘கம்யூனிசத்தில் அதிகம் ஆர்வமில்லை என்பதால் அதைப் பற்றி அழமாகப் புரிந்துக் கொள்ள முயற்சிகள் எடுக்கவில்லை.
Aravindan Neelakandan யின் “ பஞ்சம்,படுகொலை,பேரழிவு, கம்யூனிஸம்” முழுக்க முழுக்க கம்யூனிசத்திற்கு எதிரான நூல். கம்யூனிசத்திற்கு எதிரான பல கருத்துக்களை கூறியிருக்கிறார். நான் எழுதிய ‘உலகை உறையவைத்த இனப்படுகொலைகள்” நூலுக்கு இதில் இருக்கும் சில தகவல்கள் எனக்கு உதவியாகவும் இருந்திருக்கிறது. கம்யூனிசத்திற்கு எதிராக தமிழில் இதுப் போல் நூல் வந்ததில்லை என்று சொல்லலாம்.
பல எதிர்வினைகள் கம்யூனிசவாதிகளிடம் இருந்து வந்திருக்க வேண்டும். கிழக்கு பதிப்பகத்திற்கு எதிராகத் தான் கருத்துக்கள் இருந்தது. என்னால் எடுத்தோம், முடித்தோம் என்பது போல் இந்த நூலை படிக்க முடியவில்லை. கம்யூனிசத்திற்கு எதிராக பிரச்சாரமாக தெரிந்ததால் என்னவோ படிக்கும் போது சோர்வு ஏற்ப்பட்டது. தேவையான தகவல் பகுதியை மட்டும் படித்தேன்.
இதே உணர்வு தோழர் இரா. ஜவஹரின் ‘கம்யூனிசம் : நேற்று இன்று நாளை’ (நக்கீரன் வெளியீடு) புத்தகத்தை படிக்கும் போது தோன்றியது. கம்யூனிசத்திற்கு ஆதரவான நூல். கம்யூனிசத்தைப் பற்றி எண்ணற்ற தகவல், விளக்கங்கள் கொடுத்திருக்கிறார். ஆனால், எனக்கு பாடப்புத்தகமாகவே தெரிந்தது. இரண்டு வருடங்களாகியும் இன்னும் முடிக்கவில்லை. படித்து முடிக்க வேண்டும் புத்தக அடுக்கில் இன்னும் என் மேஜை மீது இருக்கிறது.
இந்த புத்தகக் கண்காட்சியில் Marudhan Gangadharan எழுதிய “உலகை மாற்றிய புரட்சியாளர்கள்” என்ற நூலை வாங்கினேன். ஸ்பார்டகஸ், சிமோன் பொலிவார் போன்றவர்களைப் பற்றி தமிழ் நூல்களில் அதிகக் குறிப்புகள் இல்லை. அந்த நூல்களில் அவர்களைப் பற்றி குறிப்புகள் மட்டுமில்லாமல், அவர்களைப் பற்றி சிறு ஆய்வு கட்டுரையும் இருக்கிறது. ஆனால், எனக்கு அதே சோர்வை கொடுக்கிறது.
பிடல் காஸ்ட்ரோ, யூகோ சாவேஸ், சே போன்றவர்களில் வாழ்க்கை வரலாற்றை மருதன் எழுதியதை படித்திருக்கிறேன். அதிகப்பட்சமாக இரண்டு நாட்களில் படித்து முடித்திருக்கிறேன். ஆனால், இந்த புத்தகத்தில் “மார்க்ஸியம்” பற்றிய கட்டுரைக்கு பிறகு மேலும் படிக்க தோன்றவில்லை. (அடுத்த இரண்டு நாளில் இந்த நூலை படித்து முடித்துவிடுவேன்).
என் வாசிப்பு தொடங்கிய புதிதில் கம்யூனிசத்தைப் பற்றி பெரிய கருத்து இல்லையென்றாலும் அதைப் பற்றி படிக்க ஆர்வமிருந்தது. இந்த பிரிவு சம்பந்தப்பட்ட நூல்கள் வேண்டாம் என்று ஒதுக்கியதில்லை. கம்யூனிசத்திற்கு சாதகமான நூலும், எதிரான நூலும் எனக்கு ஏன் சோர்வை தந்தது என்று புரியவில்லை.
ஒரு முறை கண்ணதாசன், “ பதினெட்டு வயதுக்கு மேல் கம்யூனிசத்தை ஏற்றவன் முப்பது வயதுக்கு மேல் அதில் இருந்து வந்துவிட வேண்டும். ” என்ற கூறியிருக்கிறார். வயதும், மனதும் அப்படிக் காரணமாக இருக்குமோ என்றுக் கூட தோன்றியது.
ஒரு வேளை தொடராக வந்ததை புத்தகமாக தொகுத்ததால் அப்படி இருக்கலாம்.
மேல் குறிப்பிட்ட மூன்று நூல்களுமே மிக முக்கியமான நூல்கள். சந்தேகமில்லை. இந்த புத்தகக் கண்காட்சியில் கம்யூனிசத்தைப் பற்றி தெரிந்துக் கொள்ள விரும்புபவர்கள் இந்த நூல்களை வாங்கலாம். -
நன்றி : குகன் (https://www.facebook.com/tmguhan)

No comments:
Post a Comment