Monday, 3 March 2014

உனக்காகவே மயங்குகிறேன் - யாத்விகா

 காதல் கவிதைகள் எழுதுவதில் ஏன் பெண்களால் ஆண்களை மிஞ்ச முடியவில்லை என்று தெரியவில்லை. தபூ சங்கர், கட்டளை ஜெயா போன்ற காதல் கவிஞர்களுக்கு தனி வாசகர்கள் கூட்டம் இருக்கிறது. அந்த அளவுக்கு ஏன் ஒரு பெண் எழுத்தாளர் ‘காதலை’ கொட்டி கவிதை எழுத முடியவில்லை.

’காதல்’ என்பது ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது தான். ஆனால், ஆண் கவிதைகளில் இருக்கும் காதல் ரசம் பெண் எழுதும் கவிதைகள் குறைவாக எனக்கு படுகிறது. (ஒரு வேளை இன்னும் அதற்கான கவிதை நான் தேடி படிக்கவில்லை என்றுக் கூட இருக்கலாம்.)

கவிதை எழுதுவதை துறந்தாலும், காதல் கவிதை, ஹக்கூ கவிதைகளை மட்டும் வாசித்து வருகிறேன். பத்து வருடம் பின்னோக்கி கல்லூரி நாட்களுக்கு செல்ல வேண்டும் என்றால் காதல் கவிதைப் போல் சிறந்த புத்தகம் இல்லை.

 அப்படி சமீபத்தில் வாசித்தது யாத்விகா எழுதிய ” உனக்காகவே மயங்குகிறேன்”



காதல் கவிதைகளுக்கு டெம்ளேட்டான படங்களை நிரப்பிய கவிதை தொகுப்பு தான். கௌதம் மேனன் படங்களில் பெண்ணின் காதலையும், தவிப்பையும் அழகாக சொல்வது போல் ஒரு சில கவிதைகளில் யாத்விகா சொல்லியிருக்கிறார்.

ஐயோ 
அப்படி பார்க்காதே ! 
என் 20 வருட 
அழகும் இம்சிக்கிறது 
என்னை…! 
அடிக்கடி 
கண்ணாடி பார்க்கச் சொல்லி ! 

** 

அசுரனே 
இப்படியா 
நினைப்பாய்… 
24 மணி நேரமும் 
விக்கல் எடுக்கிறது 
எனக்கு 

சில கவிதைகளில் ஆண்பால், பெண்பால் குழப்பம் ஏற்ப்படுகிறது. ஒரு பெண் பார்வையில் இந்த புத்தகம் நகர்கிறது என்று நினைத்தால், ஒரு ஆண்ணின் பார்வையில் சில கவிதைகள் வருகிறது.  ஒரு சில கவிதைகள் எங்கோ கடந்த வந்த உணர்வை ஏற்படுத்துகிறது.

மற்ற கவிதைகள் எழுதுவதை விட காதல் கவிதைகளுக்கு பல சவால்கள் இருக்கிறது. இலக்கிய அந்தஸ்து கிடைக்காது. படிக்கும் பல வாசகர்களுக்கு காதல் பரிட்சயமானதாக இருக்கும். ஒரு சிலருக்கு பிடிக்காது. அதையும் மீறி படிக்கும் வாசகர்களுக்கு ஒரு சில கவிதைகள் அமெச்சூர் தனமாக இருக்கும். இதையெல்லாம் மீறி காதல் கவிதைகள் வெல்வது கடினம்.

யாத்விகா… கவிதை என்ற வட்டத்திற்குள் அகப்பட்டுக் கொள்ளாமல் சிறுகதை, நாவல் போன்ற முயற்சிகள் மேற்கொண்டால் நன்றாக இருக்கும்.

நன்றி : குகன்

இணையத்தில் வாங்க..... இங்கே

No comments:

Post a Comment